ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வைகாசி விசாக திருவிழா: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வைகாசி விசாக திருவிழா: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வைகாசி விசாக திருவிழா: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வைகாசி விசாக திருவிழா: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வைகாசி விசாகத்தன்று (ஜூன் 12) காலை மதுரையில் இருந்து பழனிக்கும் , மாலை பழனியில் இருந்து மதுரைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வைகாசி விசாக திருவிழாவையொட்டி வரும் 12ம் தேதி மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழனியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (12.6.2022) அன்று வைகாசி விசாக திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே பயணிகள் வசதிக்காக மதுரை - பழனி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

  அதன்படி மதுரை - பழனி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.25 மணிக்கு பழனி சென்று சேரும். மறுமார்க்கத்தில் பழனி - மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மதுரை வந்து சேரும்.

  இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் ஜூன் 12 அன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே, தனது கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தரவிட்ட தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, எனது கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி !

  வைகாசி விசாகத்தினை முன்னிட்டு (ஜூன்-12) பழனி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு இன்று காலை கடிதம் எழுதி இருந்தேன். அது உடனடியாக பரிசீலிக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது.

  வைகாசி விசாகத்தன்று (ஜூன் 12) காலை மதுரையில் இருந்து பழனிக்கும் , மாலை பழனியில் இருந்து மதுரைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Madurai, Palani, Special trains, Su venkatesan