ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையிலிருந்து மணிப்பூர், மிசோரம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்!

சென்னையிலிருந்து மணிப்பூர், மிசோரம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (கோப்புப்படம்)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (கோப்புப்படம்)

மணிப்பூர், மிசோரம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் 3,400க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் ரயிலில் புறப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மணிப்பூர், மிசோரம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு  ரயில் இயக்கப்பட்டது.

தமிழகத்தில் நேற்று வரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு மணிப்பூர் ரயில் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மிசோரம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் 3,400க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் ரயிலில் புறப்பட்டனர். முன்னதாக ரயில் நிலையம் வருவதற்கு சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவர்களுடைய உடல்நிலை பரிசோதனைச் செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொலைதூரப் பயணம் என்பதால் பெரும்பாலானோர் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரை அதிகம் சுமந்து சென்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

Published by:Rizwan
First published:

Tags: Indian Railways, Lockdown