ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பழுந்தடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற சிறப்பு திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பழுந்தடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற சிறப்பு திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்பி வேலுமணி

அமைச்சர் எஸ்பி வேலுமணி

தண்ணீர் வீணாவதை தடுக்கவும் குழாய்களை சரி செய்யும் பணியை மேற்கொள்ளவும் தமிழக அரசு விரைந்து செயல்படுபதாக aமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழகம் முழுவதும் பழுதடைந்த குடிநீர் பகிர்மான குழாய்களை மாற்ற தமிழக அரசு சிறப்பு திட்டம் தயார் செய்து வருகிறது. விரைவில் இத்திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்  குழாய்கள் சேதமடைந்துள்ளது. அதனால்  தமிழக அரசு தண்ணீர் வீணாவதை தடுக்கவும் குழாய்களை சரி செய்யும் பணியை மேற்கொள்ளவும் விரைந்து செயல்படுதாக தெரிவித்தார்.

மேலும் அதற்கான திட்டத்தை தயார் செய்து வருவதாகவும், விரைவில் குழாய்கள் மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில், ஒட்டன்சத்திரத்தில் 1974-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பகிர்மான தண்ணீர் குழாய்கள் மாற்றப்படும் எனவும், அந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க... வரி வசூல்: நிர்மலா சீதாராமனுக்கு திருக்குறளை சுட்டிகாட்டிய ஆ ராசா


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Minister sp velumani, TN Assembly