முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு!

20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு!

Arrear Exam

Arrear Exam

தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையங்கள் தொடர்பாக அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 2001-2002 ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3 வது பருவத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் 2002-2003ம் கல்வியாண்டில் முதல் பருவத்தில் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத செப்டம்பர் 24 ந் தேதி முதல் அக்டோபர் 4 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் .

தேர்வர்கள் https://coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையங்கள் தொடர்பாக அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Anna University, Engineering student