கீழடியில் கிடைத்தப் பொருள்களைக் காட்சிப்படுத்த அருங்காட்சியகம்! அமைச்சர் மாஃபா பாண்டியன்

தரையில் அமராமல் அவர்களுக்கு தனியாக கூடம் அமைத்து, நாற்காலியில் அமர்ந்து தொழில் செய்யும் முறை விரைவில் கொண்டு வரப்படும்

கீழடியில் கிடைத்தப் பொருள்களைக் காட்சிப்படுத்த அருங்காட்சியகம்! அமைச்சர் மாஃபா பாண்டியன்
கீழடி
  • News18
  • Last Updated: September 22, 2019, 6:47 PM IST
  • Share this:
கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய தொழில் மேம்பாட்டு திறன் துறை அமைச்சர் மகேந்திர பாண்டே மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், ’செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்வியலை மேம்படுத்த மத்திய அரசின் சார்பில் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் மகேந்திரநாத் உறுதியளித்துள்ளதாக கூறினார். தரையில் அமராமல் அவர்களுக்கு தனியாக கூடம் அமைத்து, நாற்காலியில் அமர்ந்து தொழில் செய்யும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.

இந்தியாவில் ஒரு லட்சம் செருப்பு தைக்கும் தொழிலாளர்களும், தமிழகத்தில் 10,000 தொழிலாளர்களும் இதனால் பலன் பெறுவார்கள் என்றார் அவர். கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அங்கு கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு மிகப்பெரிய அருங்காட்சியகம்  அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Also see:
First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading