தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனோ நோய் தொற்று பரவுகிறது என்று அனைவரையும் வீட்டுக்குள் கதவை பூட்டிக்கொண்டு இருந்த அதேவேளையில் நாட்டையே தூய்மைப்படுத்த வெளியே வந்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தான்.

அந்த வகையில் உதவுவர்களுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் தூய்மை பணியாளர்களை காப்பீடு திட்டத்தில் இணைத்து நோய்த் தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் வாழ்வு பாதிக்காத வண்ணம் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளார் தெற்கு ரயில்வே அடிஷனல் டிவிஷன் ரயில்வே மேனேஜர் இளங்கோவன்.

கடந்த 60 நாட்களாக ரயில்வேயில் தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களில் பலரும் கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள் என்பதால் சம்பளம் மட்டுமே அவர்களால் பெற முடியும். ஒருவேளை நோய் தொற்று ஏற்பட்டால் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை வரும். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் வாழ்வு மிகவும் பாதிக்கப்படும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு காப்பீட்டுத் திட்டம் மூலமாக தொற்று   காலத்திலும் அவர்களுக்கு உதவும் வகையில் முன்னேற்பாடு செய்துள்ளார் ரயில்வே அதிகாரி இளங்கோவன்.


வெறும் 160 ரூபாய் செலுத்தினால் மட்டும் போதும். கொரோனோ காலத்தில் தூய்மைப் பணியாளர் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு 25,000 ரூபாய் கிடைக்கும்.
இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும். இதனை அனைவரும் முன்னின்று செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்கு ஒரு உதாரணமாகவே நான் இதை செய்தேன் என்றார் ரயில்வே அதிகாரி இளங்கோவன்.Also see:
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading