Home /News /tamil-nadu /

புதிய ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் ரத்தாவதை தடுக்க சிறப்பு வசதி... தமிழக அரசு முக்கிய முடிவு

புதிய ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் ரத்தாவதை தடுக்க சிறப்பு வசதி... தமிழக அரசு முக்கிய முடிவு

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ரத்தாவதை தடுக்க சிறப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்ற பின் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா நிவாரண நிதி முழுமையாக வழங்கப்பட்ட பின் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப தலைவர்கள் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து ரேஷன் கார்டு தொடர்புடைய சேவைகளும் இந்த தளத்தில் மேற்கொள்ள முடியும்.

    புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணுடன் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவற்றை இணையதளம் வாயிலாகவே அதிகாரிகள் சரிபார்த்து, வீடுகளுக்கு கள ஆய்வு ஊழியர்களை அனுப்பி கார்டு வழங்க பரிந்துரை செய்வர். பலரிடம் போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால் ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் இதுவரை நிராகரிக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளதால் இனி ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்யப்படாது என்று உணவுப்பெருளள் வழங்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Also Read : ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவாகவில்லையா? உடனே இதை சரி செய்தால் போதும்

    இணையதளத்தில் மறுபரிசீலனை விண்ணப்பம் என்ற புதிய ஆப்ஷன் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவைப்படும் ஆவணங்கள் பற்றிய விவரம் மெசேஜ் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். விண்ணப்பிக்கும் போது மொபைல் எண்ணுக்கு அனுப்பிய குறியீட்டு எண்ணை மறுபரிசீலனை விண்ணப்ப பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
    அந்த பக்கம் திறக்கப்பட்டதும் செல்போன் எண்ணை பதிவு செய்து ஒருமுறை பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். அதன்பிறகு அந்த பக்கத்தில் ஏற்கனவே விண்ணப்பித்த விவரங்களையும், மேல் பகுதியில் தேவைப்படும் விவரங்களையும் காட்டும்.



    இந்த ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் ஆவணங்களில் திருத்தங்களை மேற்கொண்டு சமர்பிக்க முடியும். இதை கொண்டு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்வது தவிர்க்கப்படுவதால் பொதுமக்களின் சிரமம் குறையும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ration card, Ration Shop

    அடுத்த செய்தி