கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகுண்ட ஏகாதசியின் போது, பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு தரிசன கட்டணத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறிய அவர், இது குறித்து அனைத்து கோயில்களின் இணை ஆணையர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்களாம்மன் கோவிலில் கடவுள் மட்டுமே விஐபி என இந்து சமய அறநிலையத்துறை வைத்த பேனர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Sekar Babu