ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!

மு.க.ஸ்டாலின்

முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், முரசொலி பத்திரிக்கையில் செய்தி வெளியானதாக, ஸ்டாவின் மீது அவதுாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை வருகின்ற ஜனவரி 29-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ரவி முன் விசாரணைக்கு ஆஜரானார்.

தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழா, ஜனவரி 27ல் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஸ்டாலின், தமிழக அரசை தரக்குறைவாக பேசியதாக, அவர் மீது, தமிழக அரசு சார்பில் அவதுாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதே போல, ஜூன் 5ல், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து, அவதுாறு பரப்பும் வகையில், சமூக வலைதளமான ‘ட்விட்டரில்’ கருத்துக்களை ஸ்டாலின் பதிவிட்டிருந்ததாக அவதாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், முரசொலி பத்திரிக்கையில் செய்தி வெளியானதகவும், இது தொடர்பாக அளித்த புகாரில், ஸ்டாவின் மீது அவதுாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வரை விமர்சித்தது, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசை விமர்சித்தது, உள்ளிட்ட ஆறு வழக்குகள் குறித்த விசாரணை, சென்னையில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ரவி முன் விசாரணைக்கு வந்தது.

Also read... பொங்கல் பரிசு தொகை டோக்கனில் அதிமுக கட்சி சின்னம், தலைவர்களின் படங்களை நீக்கக்கோரி திமுக மனு!

முன்னதாக, மனுக்களை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு, ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார், அப்போது அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த ஸ்டாலின் தரப்பினர், வழக்கு தொடர்பான விவரங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை நீதிபதி ரவி 29.01.2021ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: