ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

சிறப்பு முகாம்கள் நடைபெறும் வரை பொதுமக்கள் தங்களது மின் கட்டணங்களை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின் பயனீட்டாளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக நவம்பர் 28 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை அறிவித்திருந்தது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசின் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தர்.

இதையும் படிக்க : இந்தி திணிப்பு.. இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொண்டு வருகிற திங்கள்கிழமை முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அனைத்து மின்வாரிய பிரிவு மையங்களிலும் (2,811 மையங்கள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். அரசு விடுமுறைகள் தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், அதுவரை பொதுமக்கள் தங்களது மின் கட்டணங்களை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி செலுத்தலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என கூறியுள்ள அமைச்சர், குடிசைகள், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என தெரிவித்துள்ளார். இவைதவிர கைத்தறி, விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியமும் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Aadhar, Electricity, Electricity bill, Senthil Balaji