Home /News /tamil-nadu /

நீங்கள் 2K கிட்ஸ்சா? இந்த முறை பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்குதான்..!

நீங்கள் 2K கிட்ஸ்சா? இந்த முறை பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்குதான்..!

வாக்காளர் பட்டியல் (கோப்புப் படம்)

வாக்காளர் பட்டியல் (கோப்புப் படம்)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மற்ற திருத்தங்கள் செய்ய கடைசி வாய்ப்பாக வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் பிப். 23, 24 ஆகிய இரு தினங்களுக்கு (இன்றும் நாளையும்) நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 31 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.  அதில் பொதுமக்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு படிவம், பெயரை நீக்குவதற்கு படிவம், திருத்தங்களுக்கு படிவம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம் ஆகியவற்றை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

உங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முகாம் நடைபெறும். அங்கு சென்று புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு படிவத்தில் விண்ணப்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா?

http://www.elections.tn.gov.in/VoterServices.aspx இந்த லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Election Commission, First Time Voter

அடுத்த செய்தி