Home /News /tamil-nadu /

ரேசன் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? சென்னையில் இன்று சிறப்பு முகாம்

ரேசன் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? சென்னையில் இன்று சிறப்பு முகாம்

ஸ்மார்ட் ரேஷன் அட்டை

ஸ்மார்ட் ரேஷன் அட்டை

பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், நுகர்வோரின் குறைகள் குறித்தும் இந்த குடும்ப அட்டை சிறப்பு முகாம் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று சென்னையில் 17 மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்.

அதன்படி, சென்னையில் உள்ள 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்துக்கொள்ளலாம். மேலும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், நுகர்வோரின் குறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Ration card

அடுத்த செய்தி