ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆம்னி பேருந்து கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ஆம்னி பேருந்து கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்து

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கட்டண குறைப்பு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.

  சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பள்ளி கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப அதிக மாணவர்கள் பயணிக்க கூடிய வழித்தடங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

  மேலும் அதிகப்படியான பேருந்துகள் தேவைப்படும் வழித்தடங்கள் குறித்து தகவல் அனுப்ப உத்தரவிட்டுள்ளோம் என குறிப்பிட்ட அமைச்சர், விழா காலங்களில் மக்களுக்கு தேவையான கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்குகின்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தின் விலை உயராது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

  தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

  Read More: குறைகிறது ஆம்னி பேருந்து கட்டணம்... புதிய பட்டியல் விரைவில் வெளியாகிறது

  ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் குறைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்த அவர், மகளிர் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கு மேல் அதிகாரி மூலம் உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என கூறினார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bus, Diwali festival, Omni Bus