• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

 தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க...

தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க...

தீபாவளியை ஒட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • Share this:
    தீபாவளியை பொதுமக்கள் சொந்த ஊர்களில் கொண்டாட ஏதுவாக 16,540 பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. வழக்கமாக தினசரி 2,100 பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்படும் நிலையில், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 391 பேருந்துகள் இன்று கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    இதேபோல் பிற மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இருந்து 894 சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. மொத்தமாக இன்றைய தினம் 3 ஆயிரத்து 385 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    கோயம்பேட்டில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. தீபாவளிக்கு முந்தைய தினமான 3ம் தேதி வரை பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் 6 இடங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    ஆந்திரா செல்லும் பேருந்துகள் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர் வழியாக இயக்கப்பட உள்ளன.

    தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: