ஓட்டுப்போட ஊருக்குப் போறீங்களா? தேர்தல் நேர சிறப்புப் பேருந்துகள் தயார்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஓட்டுப் போடச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று 650 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்காக இயக்கப்பட உள்ளன.

Web Desk | news18
Updated: April 16, 2019, 5:11 PM IST
ஓட்டுப்போட ஊருக்குப் போறீங்களா? தேர்தல் நேர சிறப்புப் பேருந்துகள் தயார்!
சிறப்புப் பேருந்துகள்
Web Desk | news18
Updated: April 16, 2019, 5:11 PM IST
வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் உடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

தேர்தல் நாளில் வெளியூர்களில் வேலை செய்யும் வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊருக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. தமிழகப் போக்குவரத்துத் துறை சார்பில் இன்று முதல் தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஓட்டுப் போடச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று 650 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்காக இயக்கப்பட உள்ளன. மேலும், நாளை 1500 சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்து வாக்காளர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...