அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூர பயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்குச் சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 05/12/2022 மற்றும் 06/12/2022 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.
இந்தச் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc officlal app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுற பயணத்திற்கும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோயம்புத்தூர் 9445014435, தலைமையகம் 9445014435, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.