உங்களுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுக தான்... சட்டசபையில் கொதித்த முதல்வர்!

உங்களுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுக தான்... சட்டசபையில் கொதித்த முதல்வர்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: March 16, 2020, 4:15 PM IST
  • Share this:
முதலமைச்சர் பேசும் போது தொடர்ந்து குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டினை சட்டசபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் சக்கரபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுக உறுப்பினர் ஆஸ்டின் தன் இருக்கையில் அமர்ந்தபடி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பேசிய முதல்வர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது நான் குறுக்கிடுவதில்லை எனவும் நான் பேசும் போது திமுக உறுப்பினர்கள் குறுக்கிடுவது தவறு என்று தெரிவித்த அவர், ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுக தான். அந்த விலாசம் இல்லாவிட்டால் இன்று நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்க முடியாது என ஆவேசமாக பேசினார்.

அப்போது பேசிய சபாநாயகர், உறுப்பினர் ஆஸ்டின் தொடர்ந்து தவறு செய்வதாக கூறி அவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார். அப்போது பேசிய துணைமுதல்வரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம், உறுப்பினர் ஆஸ்டினுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், நடவடிகை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் திமுக உறுப்பினர் ஆஸ்டினை இன்று ஒருநாள் மட்டும் அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.


தொடர்ந்து பேசிய துரைமுருகன், உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்தபடி பேசுவது தவறான செயல்தான் எனவும், ஆஸ்டின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்து இறுதி எச்சரிக்கையுடன் உத்தரவு இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகனின் உறுதியை தொடர்ந்து ஆஸ்டினுக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.


Also see...First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading