மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் கொண்டுவந்தார். இதனை எதிர்த்து அ
திமுக,
பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது சபாநாயகர் அப்பாவு தனது பேச்சின் மூலம் அவையை கலகலப்பாக்கினார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். மதம் மொழி இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சட்டம் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அரசின் தீர்மானத்தை கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
வெளிநடப்பு செய்தன.
வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனை சபாநாயகர் அப்பாவு பேச அனுமதித்தார். அதைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், ‘ இந்த சட்டம் இந்தியாவில் வசிக்கும் எந்த இஸ்லாமியர்களுக்கும் எதிரான சட்டமில்லை’ என்று பேசினார்.
அப்போது பேச்சை இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, ‘இந்த சட்டம் என்றால் முதலமைச்சர் கொண்டுவந்த சட்டமா’ என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது. உடனே நயினார் நாகேந்திரன் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை குறிப்பிடுவதாக கூறினார்.
மேலும் படிக்க: மாநகர பேருந்தில் இலவசம் பயணம் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முடிவு
தொடர்ந்து, சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து பல்வேறு கருத்துகளை அவையில் எடுத்து வைத்த நயினார் நாகேந்திரன் இறுதியாக, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை’ என்று தவறுதலாக குறிப்பிட்டார். உடனடியாக சபாநாயகர், ‘அதைதான் நாங்களும் சொல்கிறோம் நன்றி’ என்று கூறினார். இதனால் அவையில் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.
இதையும் படிக்க: சட்டமன்ற வளாகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
சுதாரித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன்,” தவறாக குறிப்பிட்டுவிட்டேன், மத்திய அரசின் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று திருத்திக் கூறி வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அப்போது, சபாநாயகர் அப்பாவு, ‘உங்களை தனியாக விட்டுவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டனரே’ என்று நயினார் நாகேந்திரனிடம் கூற அவை கலகலப்பாக காணப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.