ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’எதிர்க்கட்சி துணைத் தலைவரே’ என அழைத்து ஓபிஎஸ் பேச வாய்ப்பு அளித்த சபாநாயகர் அப்பாவு

’எதிர்க்கட்சி துணைத் தலைவரே’ என அழைத்து ஓபிஎஸ் பேச வாய்ப்பு அளித்த சபாநாயகர் அப்பாவு

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினா விடை நேரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம்  பேச வேண்டும் என வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்கிய சபாநாயகர் அப்பாவு  துணை தலைவர் என அழைத்து பேச வாய்ப்பு கொடுத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சட்டப்பேரவையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு பேச வாய்ப்பு அளித்த போது ‘எதிர்க்கட்சி துணைத் தலைவர்’ என சபாநாயகர் அப்பாவு  குறிப்பிட்டார்.

  அதிமுக உட்கட்சி பிரச்சனையால் ஒ. பன்னீர்செல்வத்தை அக்கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமித்தார். எனினும், தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.

  இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினா விடை நேரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம்  பேச வேண்டும் என வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்கிய சபாநாயகர் அப்பாவு  துணை தலைவர் என அழைத்து பேச வாய்ப்பு கொடுத்தார்.

  அப்போது பேசிய ஓபிஎஸ், ஆதரவற்ற கால்நடைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முறையில் கோசாலை அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா..? என அறிய விரும்புகிறேன் என கேள்வி எழுப்பினார்.

  இதையும் படிங்க: ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை.. சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!

  அதற்கு பதில் அளித்த கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,இந்து சமய அறநிலைத்துறை மூலமாக ஏற்கனவே கோசலைகள் நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை துறை வாயிலாகவும் இதுபோன்று பாதுகாப்பு தேவைப்படும் கால்நடைகளுக்கு கோசாலைகள் அமைக்கும் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது விரைவில் அது அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: O Panneerselvam, OPS, TN Assembly