ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17 ஆம் தேதி தொடக்கம் ! - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17 ஆம் தேதி தொடக்கம் ! - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கைகள் கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளர்.

    இதுகுறித்து தலைமைசெயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்ட பேரவை நடைபெறும் தேதியை அறிவித்தார்.

    தமிழக சட்டப்பேரவையின் விதிகளின்படி, ஆறு மாதத்துக்கு ஒரு முறை பேரவையை கூட்ட வேண்டும். இந்த 6 மாத அவகாசம், அடுத்த மாதம் 10-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், முன்னதாக வரும் 17-ம் தேதி சட்டப்பேரவை கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மேலும் படிக்க : திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவராணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    இந்த கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கைகள் கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Assembly, CM MK Stalin, TN Assembly