எஸ்.பி.பிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடிக்கும் - சிகிச்சைக் கால அனுபவங்களைப் பகிரந்த மருத்துவர்கள்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பிடிக்கும் என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடிக்கும் - சிகிச்சைக் கால அனுபவங்களைப் பகிரந்த மருத்துவர்கள்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 4:56 PM IST
  • Share this:
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தீபக் சுப்ரமணியன் மற்றும் நந்த கிஷோர்
எஸ்.பி.பியுடனான நெகிழ்ச்சியான சில தருணங்களை நியூஸ்18உடன் பகிர்ந்து கொண்டனர். சிகிச்சை அனுபவம் குறித்து அவர்கள், ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கென தனியாக ஆறாவது மாடியில் தனி ஐ.சி.யு பிரிவு அமைக்கப்பட்டது. அங்கு அவர் கிரிக்கெட் போட்டி பார்ப்பதற்காக ஐ பேட் கொடுத்தோம். சென்னை சூப்பர் கிங்ஸ் தனக்கு பிடித்த அணி என்று கூறினார். வெண்டிலேட்டரில் இருந்ததால் அவரால் பேச முடியாது. அவர் பேச விரும்பியதை எழுதி காட்டுவார்.

எப்போது எழுதினாலும், With due respect to என்று மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வண்ணம் தான் எழுதுவார். இளையராஜா அனுப்பிய வீடியோவை எஸ்.பி.பி.சரண் காண்பித்தபோது கைபேசிக்கு முத்தமிட்டார். "எப்போது டிஸ்சார்ஜ்" என எழுதி கேட்பார். இப்போது இல்லை என கூறினால் சற்று கோவப்படுவார்.


மருத்துவமனையில் இருக்கும்போது அவரது திருமண நாள் மற்றும் மனைவியின் பிறந்த நாள் ஆகிய தினங்களில் அவரது மனைவி நேரில் வந்தார். திருமண நாளன்று சிறிய கேக் ஒன்றை அவரது மனைவி, எஸ்.பி.பி முன்னிலையில் வெட்டினார். சிகிச்சையில் இருந்தபோது கொரோனா தவிர இரண்டு முறை மற்ற தொற்று ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. கடைசி 48 மணி நேரத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்தனர்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading