அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.கவினரிடேயே கைகலப்பு - திருச்சியில் பதற்றம்

திருச்சியில் அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.கவில் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.கவினரிடேயே கைகலப்பு - திருச்சியில் பதற்றம்
அமைச்சர் வளர்மதி
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 10:46 PM IST
  • Share this:
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் வளர்மதி தலைமை தாங்கியிருந்தார்.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென நூற்றுக்கணக்கான அ.தி.மு.க உறுப்பினர்கள் மண்டபத்திற்குள் நுழைந்து மேடைக்குச் சென்றுள்ளனர். அங்கு அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அ.தி.மு.க ஒரு தரப்பினருக்கு உரிய பதவிகள் வழங்கப்படாததால் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலைமை தீவிர விசாரணை நடத்திவருகிறது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் வளர்மதி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading