100 நாள் வேலை திட்டப் பணிகளைத் தொடங்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்!

பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 நாள் வேலை திட்டப் பணிகள் தொடங்கிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

100 நாள் வேலை திட்டப் பணிகளைத் தொடங்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (File Image)
  • Share this:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 650 குடிசைப் பகுதிகளில் சுமார் 26 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒருவருக்கு இரண்டு முகக்கவசம் என மறுபயன்பாட்டுடன் கூடிய துணியால் ஆன 50 லட்சம் முகக்கவசங்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றார்.


மேலும், மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாளர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி படிப்படியாக அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள், குடிநீர் பணிகள், நீராதார பணிகள் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்புப் பணிகள் தொடங்கிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
Also see:
First published: May 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading