Home /News /tamil-nadu /

எஸ்.பி.பியின் உடல் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

எஸ்.பி.பியின் உடல் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

நல்லடக்கம் செய்யப்படும் எஸ்.பி.பி

நல்லடக்கம் செய்யப்படும் எஸ்.பி.பி

இந்து மத முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற்று மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் செங்குன்றத்திலுள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அவரது கோடம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். ஆந்திர மாநில அரசின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.


    தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், எஸ்.பி.பி.சரண் இறுதிச் செய்தார். அதன்பிறகு, 24 குண்டுகளாக மூன்று முறை முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    Published by:Karthick S
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி