சீன அதிபர் வருகையால் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன

கிழக்கு கடற்கரை சாலையில் சீன அதிபர் பயணிக்கும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

Web Desk | news18
Updated: October 12, 2019, 10:51 AM IST
சீன அதிபர் வருகையால் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன
சென்னை சாலை
Web Desk | news18
Updated: October 12, 2019, 10:51 AM IST
சீன அதிபர் 9.40 மணிக்கு கிண்டி தனியார் விடுதியில் இருந்து கோவளத்தில் உள்ள தனியார் விடுதிக்கு புறப்பட்டார்.  இதற்காக சோழிங்கநல்லூர் இணைப்பு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

கிழக்கு கடற்கரை சாலையில் ராஜீவ் காந்தி சாலை வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சோழிங்க நல்லூர் இணைப்பு சாலையில் நிறுத்தப்பட்டு பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்பட்டது. ஜிஎஸ்டி சாலையிலிருந்து அண்ணா சாலையை இணைக்கும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சோழிங்க நல்லூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் சீன அதிபர் பயணிக்கும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பழைய மகாபலிபுரம் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சீன அதிபர் கோவளம் சென்றடைந்த நிலையில்,  தற்போது போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறது.

பார்க்க :

Loading...

மாமல்லபுரத்தின் கதை

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...