முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அன்புமணிக்காக பிரசாரக் களத்தில் இறங்கிய மனைவி சௌமியா அன்புமணி!

அன்புமணிக்காக பிரசாரக் களத்தில் இறங்கிய மனைவி சௌமியா அன்புமணி!

சௌமியா அன்புமணி

சௌமியா அன்புமணி

அன்புமணிக்கு ஆதரவாக சௌமியா அன்புமணி, தர்மபுரி உழவர் சந்தை ஆவின் பால் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அன்புமணிக்காக தர்மபுரி உழவர் சந்தையில் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் அன்புமணிக்கு ஆதரவாக அவரது மனைவியும் பசுமைத் தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி, தர்மபுரி உழவர் சந்தை ஆவின் பால் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் சௌமியா அன்புமணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அந்த திட்டமான தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 13 நீர் திட்டங்களில் நான்கு நீர் திட்டங்கள் தற்போது ஆளுங்கட்சி துணையுடன் செயல்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. மீதம் உள்ள அனைத்து நீர் திட்டங்களையும் செயல்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.  அவ்வாறு வாய்ப்பு வழங்கினால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சரை நேரில் அன்புமணி ராமதாஸ் வற்புறுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தர்மபுரியில் நடைபெற்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என உறுதியளித்தார். மற்றவர்கள் தொகுதி விட்டு தொகுதி மாறி நின்று தேர்தலைச் சந்திப்பார்கள்.

ஆதனால், தர்மபுரி மக்களை நம்பியும் நிலுவையில் உள்ள திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும் மீண்டும் இதே தொகுதியில் அன்புமணி போட்டியிடுவதாகவும் அதனால் பொதுமக்கள் அன்புமணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Also Watch

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

SCHEDULE TIME TABLE:

First published:

Tags: Anbumani ramadoss, Dharmapuri S22p10, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019