இந்தியாவில் அதிக
மழைப் பொழிவைத் தரும் தென்மேற்கு பருவமழை, ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
இந்த நிலையில், இந்த ஆண்டில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே 29-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையே தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பான அளவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீண்ட கால சராசரி மழையளவில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையின் மூலம் 39.34 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகும்.
செல்பி எடுத்தபோது விபரீதம்.. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமி
இந்த நிலையில், நடப்பாண்டில் தமிழகத்தில் இயல்பான மழையே பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.