• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தென்மேற்கு பருவமழை, சராசரியை விட 17 சதவீதம் கூடுதல்

தென்மேற்கு பருவமழை, சராசரியை விட 17 சதவீதம் கூடுதல்

மழை

மழை

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையான காலத்தில், தென்மேற்கு பருவமழை, சராசரியை விட 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னையில் திருவல்லிக்கேணி, அடையாறு, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, எழும்பூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் காலையில் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், செங்குன்றம், பொன்னேரி‌ மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்‌ பலத்த‌ மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளதாக தெரிவித்தார். 26 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 14 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், ஒரு மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை பெய்திருப்பதாகவும் கூறினார்.  அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதலாக 68 சதவீதம் மழையும் next திருப்பத்தூர், தேனி, கோவை மாவட்டங்களில் இயல்பை விட 50% அதிகமாக மழையும் பெய்திருப்பதாக தெரிவித்தார்.

    செங்கல்பட்டு, காரைக்கால், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயல்பை விட 10 முதல் 15 சதவிகித குறைவான மழை பெய்திருப்பதாக குறிப்பிட்டார். சென்னைக்கான சராசரி மழை அளவு, 46 சென்டி மீட்டர் என கணிக்கப்பட்ட நிலையில், 50 சென்டி மீட்டர் கிடைத்திருப்பதாகவும், இது இயல்பை விட 7 சதவிகிதம் அதிகம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.  ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 17 சதவிகிதம் கூடுதலாக தென்மேற்கு மழை பெய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

    Also Read : கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி 

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும், வடதமிழகத்தில் கனமழையும், சென்னையின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் கூறினார். இதற்கிடையில், அரபிக்கடலில் வெள்ளிக்கிழமை புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: