அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்!

புதிய அட்டவணை வரும் ஜுலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்!
இந்திய ரயில்வே
  • News18
  • Last Updated: June 29, 2019, 9:22 AM IST
  • Share this:
சென்னையில் இருந்து தென்மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து தென்மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல ரயில்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. புதிய அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் - குருவாயூர் (எண்16127) எக்ஸ்பிரஸ் தினசரி காலை 8.15 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு புறப்படும். இதைப்போல தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் எழும்பூர் - கொல்லம் (16723) அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும், தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் எழும்பூர் - நெல்லை (12631) எக்ஸ்பிரஸ் ரெயில் இனி 7.50 மணிக்கு புறப்படும்.


மேலும் தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் எழும்பூர்-தஞ்சாவூர் (16865) உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கும், தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் எழும்பூர்-சேலம் (22153) எக்ஸ்பிரஸ் ரெயில் 10.45 மணிக்கும், தினசரி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு-கச்சிகுடா (17652) எக்ஸ்பிரஸ் ரெயில் 3.20 மணிக்கும் புறப்படும்.

புதிய அட்டவணை வரும் ஜுலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதைப்போல சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட பல ரயில்களின் புறப்படும் நேரங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.First published: June 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்