கொரோனோ காரணமாக 1799 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த தெற்கு ரயில்வே..

கோப்புப் படம்

தெற்கு ரயில்வே சராசரியாக 3,500 கோடிக்கு மேலாக வருவாயை பெறும் தெற்கு ரயில்வே பொது முடக்கம் காரணமாக சுமார் 1800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டை சந்தித்துள்ளது.

  • Share this:
பொது முடக்க காலகட்டத்திலும் தொடர்ந்து தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக ரயில் பயணிகள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை பயன்படுத்திக்கொண்டனர்.
தமிழக அரசும் ரயில் பயணிகளுக்கு தளர்வுகள் அளித்து உத்தரவிட்டனர். ஆனாலும் தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்ட ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் 20 சதவீதத்திற்கு குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டது. இதனால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் தெற்கு ரயில்வேயில் டிக்கெட் வருவாய் பெருமளவில் குறைந்தது. குறிப்பாக 2019-20 ஆம் ஆண்டுகளில் 2014.52 கோடி வருவாய் பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 476.83 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் தெற்கு ரயில்வே சுமார் 1799  கோடி ரூபாய் இழப்பீட்டை சந்தித்துள்ளது.



இந்நிலையில் இழப்பீட்டால் தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன மேம்பாட்டு வசதிகள் பார்க்கிங் வசதிகள் மற்றும் புதிய திட்டங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களுக்கும் ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... Corona | கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன - அமைச்சர் சுப்பிரமணியன்

எனவே தற்போது அதற்கு ரயில் சேவை பெறும் பயணிகளுக்கு எந்த இடையூறும் இருக்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளையில் தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Published by:Vaijayanthi S
First published: