2021 ஆம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வே சார்பில் 14 புதிய ரயில்கள் இயக்கத் திட்டம்

2021ம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வே சார்பில் புதிய 14 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வே சார்பில் 14 புதிய ரயில்கள் இயக்கத் திட்டம்
ரயில் (கோப்புப்படம்)
  • Share this:
இந்திய ரயில்வே நேர குழுவின் 2020-21ம் ஆண்டிற்கான ஆலோசனைப்படி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 14 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும், 12 ரயில்களை நீட்டிக்கவும் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொரு ரயில்வே கோட்டத்தில் இருந்து அனுப்பப்படும் திட்டங்களின் அடிப்படையில் ரயில்வே நேர அட்டவணையில் மாற்றங்களைச் செய்ய IRCTC பரிந்துரைக்கிறது. அதன்படி தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு என மொத்தம் 14 ரயில்களை அறிமுகப்படுத்தவும், 12 ரயில்களை விரிவுபடுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

சென்னை - திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம் - விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்த சென்னை பிரிவு பரிந்துரைத்துள்ளது.


திருச்சி கோட்டம் சார்பில் ஐந்து புதிய ரயில்களை அறிமுகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆறு ரயில்களை நீட்டிக்க ஒப்புதல் கோரியுள்ளது.

ஆறு பிரிவுகளின் திட்டங்கள் நேர அட்டவணை குழு மற்றும் ரயில்வேயின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ரயில்வே ஒப்புதல் தேவைப்படுகிறது. எனவே ஒப்புதல் கிடைத்த பிறகு அதற்கான அறிவிப்பு இந்தாண்டு அறிவிப்பு வெளியாகும் என ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.2020-21 ஆம் ஆண்டுக்கான ஐஆர்டிடிசியில் புதிய ரயில்கள் முன்மொழியப்பட்டுள்ளன:

1. சென்னை - திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ்
2. தாம்பரம் - விசாகப்பட்டினம் வாராந்திர ரயில்
3. திருநெல்வேலி - கோயம்புத்தூர் தினசரி எக்ஸ்பிரஸ்
4. ராமேஸ்வரம் - பாலக்காடு தினசரி எக்ஸ்பிரஸ்
5. திண்டுக்கல் - பாலக்காடு தினசரி எக்ஸ்பிரஸ்
6. கோயம்புத்தூர் - ராமேஸ்வரம்  எக்ஸ்பிரஸ்
7. கோயம்புத்தூர் - பெங்களூரு  எக்ஸ்பிரஸ்
8. திருச்சி - கரூர், சேலம் மற்றும் ஓசூர் வழியாக பெங்களூரு
9. திருச்சி - பயையப்பனஹள்ளி இரு வார எக்ஸ்பிரஸ்
10.தாம்பரம் - காரைக்குடி தினசரி எக்ஸ்பிரஸ்
11. திருச்சி - மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ்
12. திருவாரூர் - காரைகுடி பயணிகள் ரயில்
13. கொச்சுவேலி - கோயம்புத்தூர் அந்தோடயா வாராந்திர எக்ஸ்பிரஸ்
14. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading