பெண்களுக்கான நேரக்கட்டுப்பாடு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மாதிரி படம்.

பெண்களுக்கான நேரக்கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் டிசம்பர் 14 முதல் நேரக் கட்டுப்பாடுகளின்றி பெண்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், திங்கட்கிழமை முதல் Peak Hours எனப்படும் நெரிசல் நேரங்களில் புறநகர் மின் ரயில்களில் பெண்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அவர்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் மார்கங்களில் திங்கட்கிழமை முதல் மின் ரயில் சேவை இயக்கப்படும் எனவும், பயணத்தின் போது மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இவ்வாறு தளர்வு அளித்ததைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பெண்கள் வழக்கம் போல பயணம் செய்ய வழியேற்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: