Home /News /tamil-nadu /

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா; ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாள் இதோ

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா; ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாள் இதோ

கோப்பு படம்

கோப்பு படம்

ஜனவரி 10ஆம் தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை செப்டம்பர் 12ஆம் தேதி முதல் IRCTC இணையதளத்தில் செய்து கொள்ளலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் எனவும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    2023ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இதையும் வாசிக்க: ரேசன் கடை பெண் ஊழியர்களுக்கு 360 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் - தமிழக அரசு

    ஜனவரி 10ஆம் தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை செப்டம்பர் 12ஆம் தேதி முதல் IRCTC இணையதளத்தில் செய்து கொள்ளலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பண்டிகை நாட்களின் போது முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். எனவே காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குப்படும் எனவும் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: IRCTC, Pongal festival, Southern railway

    அடுத்த செய்தி