தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் உருவான முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வேண்டிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது.
அரபிக்கடலில் தென்மேற்கு பருவக் காற்று வலுவடைந்திருப்பதாகவும், தெற்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் மேகங்கள் அதிகளவு உருவாகியிருப்பதால் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் நோக்கி 48 மணி நேரத்தில் நகர்ந்து அதற்கு பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Also Watch : தாறுமாறாக வந்த கார் பைக்கில் சென்றவர்களை தூக்கி எறிந்தது.... பதற வைக்கும் சிசிடிவி காட்சி!
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.