ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தென்னிந்தியா முழுவதும் பாஜகவை வரவேற்கும் சூழல் உருவாகியுள்ளது - வானதி சீனிவாசன் கருத்து

தென்னிந்தியா முழுவதும் பாஜகவை வரவேற்கும் சூழல் உருவாகியுள்ளது - வானதி சீனிவாசன் கருத்து

வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்.

தென்னிந்தியா முழுவதும் பாஜகவை வரவேற்கும் சூழல் உருவாகியுள்ளது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவியின் மகள் திருமணம் நாகர்கோவிலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்றார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் தண்டிப்பதற்கு போக்சோ சட்டம் மோடி அரசால் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் ஊடகங்கள் உள்ளிட்டவையும் இணைந்துதான் பெண்கள் மீதான பிரச்னைகளைத் தடுக்க முடியும் என்றார்.

  மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு என தனி காவல்நிலையம், நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டாலும் பெண்களுக்கான நியாயம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக முதல்வரைச் சந்திக்க உள்ளதாகவும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் உள்ளது போன்று தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சி இருந்த காலம் போய் அவ்விடத்தை பாஜக கைப்பற்றியுள்ளதாகக் கூறிய வானதி சீனிவாசன், தென்னிந்தியா முழுவதும் பாஜக ஆளும் காலம் உருவாகி வருவதாகக் கூறினார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் வருங்காலம் பாஜகவின் காலமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Rizwan
  First published:

  Tags: BJP, Vanathi srinivasan