பேரறிஞர் அண்ணா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, முரசொலிமாறன், வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதியாகத் திகழ்கிறது தென் சென்னை.
1957-ம் ஆண்டு இரண்டாவது மக்களவை தேர்தலின் போது உருவாக்கப்பட்ட தொகுதி தென் சென்னை. 8 முறை தி.மு.க-வின் பாசறையாக இருந்த தென் சென்னை தொகுதியையும் கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கைப்பற்றியது.
2014-ம் ஆண்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஜெ. ஜெயவர்தன் 4,38,404 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் டி.கே.எஸ். இளங்கோவன் 3,01,779 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பா.ஜ.க-வின் இல.கணேசன் 2,56,786 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். காங்கிரஸின் எஸ்.வி. ரமணி வெறும் 24,420 வாக்குகளைப் பெற்று டெபாஸிட் இழந்தார். 2014-ம் ஆண்டு 9,00,950 ஆண் வாக்காளர்கள், 8,94,141 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் பிரிவில் 314 பேர் என மொத்தம் 17,95,404 வாக்காளர்கள் இருந்த தென் சென்னை தொகுதியில் வெறும் 60.37 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.