• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்லியில் முகாமிட்டுள்ள ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல்

டெல்லியில் முகாமிட்டுள்ள ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல்

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • Share this:
    அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். அவரது டெல்லி பயணம் அரசியல் அரங்கில் பரபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீதான பிடி இறுகும் நிலையில் அவரின் டெல்லி பயணத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

    2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார், இருப்பினும் திமுகவின் தங்கபாண்டியனிடம் அவர் தோல்வி அடைந்தார். பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அதிரடியான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவரின் கருத்துக்களால் சில நேரங்களில் அதிமுக தலைமைக்கே சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.

    அதிலும் குறிப்பாக 2019ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை கூட்டினார். இஸ்லாமியர்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, அமைச்சராக இருந்த போதே பாஜக கொள்கைகளுக்கும், பிரதமர் மோடிக்கு இணக்கமான வகையிலுமே பேசி வந்தார்.

    இதன் காரணமாகவே அவரிடம் இருந்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில், இன்று காலையில் டெல்லி சென்ற அவர், அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் பாஜகவில் சேரப் போவதாகவும் பேசப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆவின் நிர்வாகத்தில் நினைத்துப் பார்க்க முடியாதபடி ஊழல் நடந்துள்ளது. அதிலிருந்து தப்ப பா.ஜ.கவில் இணைய விரும்புகிறார். ஆகஸ்ட் 10-ம் தேதி முறைப்படி பா.ஜ.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேந்திர பாலாஜியுடன் சேர்ந்து உடுமலை ராதாகிருஷ்ணனுன் இணைவார் என்று தெரிகிறது. முன்னதாக ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைவது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது, ‘யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. பா.ஜ.க சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு வருபவர்களை கட்சியில் சேர்ப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: