• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • யார் இந்த சூனாபானா s/o சங்கிமங்கி? இ-பாஸ் விவகாரத்தில் புது சர்ச்சை...

யார் இந்த சூனாபானா s/o சங்கிமங்கி? இ-பாஸ் விவகாரத்தில் புது சர்ச்சை...

Youtube Video

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சூனாபானா மற்றும் சங்கி மங்கி என்ற பெயர்களில் இ பாஸ் எடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

  • Share this:
    மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வழங்கப்படும் இ பாஸ், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சூனாபானா என்ற பெயரில், 0000 என்ற வாகன எண்ணில் கொடுக்கப்பட்ட இ பாஸ் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

    தமிழக அரசின் இ பாஸ் வழங்கும் முறையை வரையறை செய்வதற்காக இதுபோல் இ பாஸ் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் சூனாபானா. யார் இந்த சூனா பானா?

    தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தற்போது, தானியங்கி முறையில் இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்வதற்காக ஒரு நபர் இ பாஸ் எடுத்துள்ளார்

    அதில், தனது பெயர் சூனாபானா எனவும் தந்தையின் பெயர் சங்கி மங்கி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் செல்லும் வாகனத்தின் எண் TN 01 X 0000 என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்

    இந்த விவரங்களின் அடிப்படையில் அவருக்கு 23ம் தேதி ஒருநாள் மட்டும் செல்லுபடியாகும் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது

    இந்த இ பாஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுற்றுலா வாகன சங்கத் தலைவர் சரவணன், சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

    இ பாஸ் வழங்கும் முறையை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சூனாபானா என்ற பெயரில் இ பாஸ் எடுத்ததாகவும் விளையாட்டாக எடுக்கவில்லை என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா ஊரடங்காலும் இ பாஸ் நெருக்கடிகளாலும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து விட்ட வாகன ஓட்டுநர்கள், இதுபோல விளையாட்டுத் தனமாக செய்யப்படும் இ பாஸ் விவகாரங்களால் தமிழக அரசு மேலும் கிடுக்கிப்பிடி போட்டு விடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

    யார் இந்த சூனாபானா? அவர் ஏன் இதுபோல இ பாஸ் எடுத்தார்? என்பது வெளிச்சத்திற்கு வருமா? இ பாஸ் வழங்கும் முறை நெறிப்படுத்தப்படுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: