ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டான் படத்தின் இசை உரிமை விற்பனை மற்றும் முதல் சிங்கிள் விவரம்

டான் படத்தின் இசை உரிமை விற்பனை மற்றும் முதல் சிங்கிள் விவரம்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் டான் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷனும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரித்துள்ளன.

 • 1 minute read
 • Last Updated :

  சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் வாங்கியுள்ளது.

  முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்களின் படங்களின் இசை உரிமையை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. ரஹ்மான் இசையில் கௌதம் இயக்கிவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை உரிமையை திங்க் மியூஸிக் கைப்பற்றிய நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் வாங்கியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

  டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் டானுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. டாக்டரைப் போல இந்தப் படமும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

  2022 பிப்ரவரி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாக திட்டம். நவம்பர் 4 சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாவதால் டான் படத்தை பிப்ரவரி 11 ஆம் தேதிக்குப் பதில் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக இன்டஸ்ட்ரியில் பேச்சு நிலவுகிறது.

  Also read... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ப்ரியா பவானி சங்கரின் பிளட் மணி

  முன்னதாக படத்தின் முதல் பாடலை வெளியிட உள்ளனர். அது குறித்த அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு லைகா புரொடக்ஷன் வெளியிடுகிறது.

  அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் டான் படத்தை சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷனும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரித்துள்ளன.

  First published: