ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாயுடன் உறவில் இருந்தவரை வெட்டிக் கொன்ற மகன்கள்! சென்னையில் பதற்றம்

தாயுடன் உறவில் இருந்தவரை வெட்டிக் கொன்ற மகன்கள்! சென்னையில் பதற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தாயுடன் முறை தவறி பழகி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகன்கள், அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கொளத்துாரில் ரெட்டேரி சிக்னல் அருகே, ஆட்டோ ஓட்டுநர் அன்சர் பாட்சா, 18-ம் தேதி இரவு 11 மணியளவில் தனது ஆட்டோவில் அமர்ந்திருந்தார், அவருடன் ஆட்டோவில் லட்சுமியும், அன்சர் பாட்சாவின் தாய் மெகபூபாவும் அமர்ந்து மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால், அன்சர் பாட்சாவை ஆட்டோவில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டுசரமாரியாக வெட்டியுள்ளனர்.

முகத்தில் வெட்டுகள் விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்சர் பாட்சா அங்கேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் போலீசார் 5 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்களை அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை கொளத்துாரைச் சேர்ந்தவர்கள் ரவி - லட்சுமி தம்பதி. இந்த தம்பதிக்கு பெரிய அஜித், சின்ன அஜித் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

தாம்பரம் அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அன்சர் பாட்சா, கொளத்துாரில் தாயுடன் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார்.

அன்சர் பாட்சாவுக்கும் லட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது; அவர் அடிக்கடி லட்சுமியின் வீட்டிற்கு வந்து செல்லத் தொடங்கினார்.

தாயின் கள்ளக்காதலை ஏற்றுக் கொள்ள முடியாத இளையமகன் சின்ன அஜித் இதுகுறித்து இருவரையும் அடிக்கடி கண்டித்துள்ளார்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

இந்த நிலையில், 18-ம் தேதி இரவு ரெட்டேரி சிக்னல் யூனியன் வங்கி அருகே ஆட்டோவில் லட்சுமி, அன்சர் பாட்சா, அன்சரின் தாய் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சின்ன அஜித்துக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது; ஆத்திரமடைந்த அவர் தங்கள் நண்பர்களுடன் அன்சர் பாட்சாவை மிரட்டி அனுப்பலாம் என்ற திட்டத்தோடு அங்கு சென்றுள்ளார்.

அன்சர் பாட்சாவுக்கும் சின்ன அஜித்துக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அன்சர்பாட்சா சின்ன அஜித்தைப் பார்த்து ஆபாசமாக சில வார்த்தைகளைக் கூறி திட்டியதாகக் கூறப்படுகிறது.

அதுவரை வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்த சின்ன அஜித்தும் பெரிய அஜித்தும், ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் அன்சர் பாட்சாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கைதானவர்களில் சின்ன அஜித் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் 21 வயதான அஜித், 22 வயதான அஸ்வின், 20 வயதான பன்னீர் செல்வம், 22 வயதான சந்தோஷ் குமார், 22 வயதான அசோக் ஆகிய 5 பேர் கைதாகியுள்ளனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Murder