சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்கள் - வீடியோ வெளியானதால் பரபரப்பு

Youtube Video

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சொத்துக்காக தந்தையை 2 மகன்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

  கீழ்அனுபம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு 4 மன்கள் உள்ளனர். முதல் மகன் சிவக்குமாருக்கும், மூன்றவாது மகன் ரங்கநாதனும் சொத்துக்காக தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் கடைசி மகன்தான் தன்னை கவனித்து வருவதாகவும், இதனால் அவர்கள் இருவருக்கும்  சொத்தை தர முடியாதென கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

  ஆத்திரமடைந்த இருவரும் தந்தை எனும் பாராமால் அவரை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர்.  இதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கோவிந்தராஜ் தங்கியிருந்தார்.

  எனினும் அவரை விடாமல் துரத்திய மகன்கள் இருவரும், ரயில் நிலையத்தில் வைத்தும் கோவிந்தராஜை கொடூரமாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

  இதனிடையே தனது 2 மகன்களும் சொத்துக்காக தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

  ஆனால்  நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி  கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோவிந்தராஜ் புகார் அளித்த பின்னர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: