10 மாதங்களுக்கு முன் காணாமல் போன மூதாட்டி... குடிபோதையில் மகனே கொன்று புதைத்தது அம்பலம்... துப்பு துலங்கியது எப்படி?

சீர்காழி அருகே குடிபோதையில் தாயை கொன்ற மகன் 10 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூரில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ட்ரைனேஜ் கட்டுவதற்காக சாவித்திரி என்பவர் வீட்டின் வாசலில் குழி தோண்டி உள்ளனர். குழி தோண்டி எடுக்கப்பட்ட மண் அருகில் உள்ள ஒரு இடத்தில் கொட்டப்பட்டது. அந்த மண்ணில் இருந்து மனித எலும்பு, உடல் பாகங்கள் இருந்தன. இதனைப் பார்த்த மக்கள் கிராம நிர்வாக அலுவலர் அருள் பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர் போலீசுக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற வருவாய்த் துறையினர் மற்றும் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருக்கருக்காவூர் அய்யனார்கோவில் தெருவைச் சேர்ந்த 40 வயதான வேலு என்பவரின் தாய் சாந்தி  10 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக சாந்தியின் மகன் வேலுவை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சாவித்திரிக்கு வேலு என்ற மகனும் தையல் நாயகி என்ற மகளும் உள்ளனர். தனது சொத்தை பிரித்துத் தருமாறு அடிக்கடி தாயிடம் கேட்டு வேலு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)


கணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை

10 மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் தாய் சாவித்திரியை வேலு தாக்கியுள்ளார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மறைக்க திட்டமிட்ட வேலு, வீட்டின் எதிரே குழி தோண்டி புதைத்துள்ளார். பின்னர் தாயை காணவில்லை என கடந்த 10 மாதங்களாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி நாடகமாடி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
 

இதனை அடுத்து வேலுவை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading