ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்ட தாயை ஓடஓட விரட்டி கொன்ற சிறுவன்...

வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்ட தாயை ஓடஓட விரட்டி கொன்ற சிறுவன்...

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடலூர் மாவட்டத்தில் வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்ட தாயை ஓட ஓட விரட்டிக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார் 15 வயது மகன். குடும்பத்தில் நடந்தது என்ன?

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் மணலூர் அருகே உள்ள லால்புரத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் - சங்கீதா தம்பதி. பாலமுருகன், கவரிங் செயின் செய்யும் தொழில் செய்து வருகிறார். சங்கீதா மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

  இவர்களின் 15 வயது மகன், அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கீதா தனது வீட்டில் வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது

  அதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன், தாயிடம் சண்டை போட்டுள்ளார். கோபமடைந்த சங்கீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

  தகவல் அறிந்த 15 வயது மகன், தாயை தாக்கியுள்ளார்.அவரிடம் இருந்து தப்பிக்க சங்கீதா ஓடியுள்ளார். ஓட ஓட விரட்டிய மகன், கத்தியால் அவரது வயிற்றில் குத்தியதில், குடல் சரிந்து அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். பின்னர் அருகில் உள்ள சிதம்பரம் தாலுகா காவல்நிலையத்திற்கு சென்று தாயைக் கொன்றதாக சிறுவன் சரணடைந்தார்.

  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கீதாவின் சடலத்தை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

  படிக்க...நடுக்கடலில் குமரி மீனவர்கள் படகு மீது கப்பல் மோதி 3 பேர் உயிரிழப்பு.. நீரில் மூழ்கிய 9 பேர் மாயம்

  தகாத உறவில் ஈடுபட்டதால் பெற்ற தாய் என்றும் பாராமல் மகனே கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Cuddalore, Murder