தந்தையை எரித்துக்கொலை செய்த மகன்: சொத்துக்காக வெறிச்செயல்!

news18
Updated: July 12, 2018, 7:27 AM IST
தந்தையை எரித்துக்கொலை செய்த மகன்: சொத்துக்காக வெறிச்செயல்!
கோப்புப் படம்
news18
Updated: July 12, 2018, 7:27 AM IST
சென்னையில் சொத்து பிரச்னையால் தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரில் வசித்து வரும் துளசிராமன். இவருக்கு மூன்று மகன்கள். மூன்றாவது மகன் நரசிம்மன் சொத்தை பிரித்து தருமாறு கடந்த ஆறு ஆண்டுகளாக தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் தந்தை மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டில் துளசிராமன் தனியாக இருந்த போது, அவரின் கை கால்களை கட்டி விட்டு நரசிம்மன் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிடடு தப்பியோடி விட்டார். வீட்டிற்குள் புகை வருவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சென்று  பார்த்த போது, துளசிராமன் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீசார் துளசிராமனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும், தந்தையை கொலை செய்துவிட்டு தப்பியோடி அம்பத்தூரில் பதுங்கியிருந்த நரசிம்மனை போலீசார் கைது செய்தனர். மற்ற இரு மகன்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், சொத்து பிரச்சனைக்காக தந்தை கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதாவது காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நரசிம்மன் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...