Home /News /tamil-nadu /

பெற்றோரை கத்தியால் குத்திய மகன்.. தந்தை உயிரிழப்பு.. போலீசிடம் நாடகம் ஆடியது அம்பலம்

பெற்றோரை கத்தியால் குத்திய மகன்.. தந்தை உயிரிழப்பு.. போலீசிடம் நாடகம் ஆடியது அம்பலம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தாயார் உடல் நலம் தேறி வந்தபோது, நடந்த உண்மையை போலீசிடம் தெரிவித்து விட்டார்.

    குடும்ப பிரச்னை காரணமாக தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாக்குதலால் படு காயம் அடைந்த தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் பனேரியா. இவர் தனது மனைவி மற்றும் 27 வயதாகும் மகன் லோகேஷூடன் வசித்து வருகிறார். கடந்த 10-ம்தேதி, பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

    அப்போது, தாய் மற்றும் தந்தையை லோகேஷ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. சண்டையின்போது லோகேஷுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. நிதான நிலைக்கு வந்ததும், ஆம்புலன்சை வரச்சொல்லுமாறு வாட்ச்மேனிடம் லோகேஷ் கூறியுள்ளார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினரை வாட்ச் மேன் அலெர்ட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வந்ததும், 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில், தந்தை பிரமோத் படுகாயங்களுடன் உயிரிழந்தார்.

    இதையும் படிங்க :  பல இளம்பெண்களை தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கணவர்... போலீசாரிடம் சிக்க வைத்த காதல் மனைவி

    என்ன நடந்தது என்று போலீசார் முதலில் விசாரித்தபோது, தந்தை பிரமோத் தன்னையும், தாயாரையும் தாக்கி விட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று லோகேஷ் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

    அவரது பதிலால் சந்தேகம் அடைந்த போலீசார், லோகேஷை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அவரது தாயார் உடல் நலம் தேறி வந்தபோது, நடந்த உண்மையை போலீசிடம் தெரிவித்து விட்டார். இதையடுத்து லோகேஷை போலீசார் கைது செய்தனர்.

    இதையும் படிங்க : பட்டினியால் சிறுவன் இறந்த செய்தியில் திருப்பம்... சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி

    விசாரணையில், தந்தை பிரமோத் தினமும் குடித்து விட்டு வந்து, தன்னை சரமாரியாக தாக்குவார் என்றும், தாயாருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடுவதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்த 2 பேரிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர்களை கொல்ல திட்டமிட்டதாக கூறி போலீசிடம் லோகேஷ் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி