தோசைக் கரண்டியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்; திரைப்பட பாணியில் உடலை மறைக்க முயற்சி! கோவையில் அதிர்ச்சி

போதையில் இருந்த சிவராஜ் வீட்டில் இருந்த தோசைக்கரண்டியை எடுத்து அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாகாளி உயிரிழந்தார்.

தோசைக் கரண்டியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்; திரைப்பட பாணியில் உடலை மறைக்க முயற்சி! கோவையில் அதிர்ச்சி
போதையில் இருந்த சிவராஜ் வீட்டில் இருந்த தோசைக்கரண்டியை எடுத்து அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாகாளி உயிரிழந்தார்.
  • Share this:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தந்தையை தோசைக்கரண்டியால் மகன் அடித்துக் கொன்று, பாபநாசம் பட பாணியில் வீட்டிலேயே குழி வெட்டி புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சின்னக்கள்ளிப்பட்டி சண்முகாபுரம் பழைய ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் 60 வயதான மாகாளி. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூவாள 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், மாகாளி தனியாக வசித்து வந்தார். 40 வயதான மகன் சிவராஜ் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வந்தார்.

தந்தை மாகாளிக்கும் மகன் சிவராஜ் இடையே சிறு சிறு பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வியாழக்கிழமை இரவு சிவராஜ் குடிபோதையில் தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த சிவராஜ் வீட்டில் இருந்த தோசைக்கரண்டியை எடுத்து மாகாளியை அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாகாளி உயிரிழந்தார்.


இதை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், பாபநாசம் பட பாணியில் உடலை மறைக்க சிவராஜ் முயற்சித்துள்ளார். வெளியில் உடலை எடுத்துச் சென்றால் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வரும் என்பதால், நடு வீட்டிற்குள் உடலை புதைக்க குழி தோண்டியுள்ளார். மாகாளியின் வீட்டிற்குள் குழி தோண்டும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கதவை தட்டியுள்ளனர்.

வெளியே வந்த சிவராஜ் இடம் என்ன சத்தம் எனக் கேட்டனர். ஒன்றும் இல்லை எனக்கூறிவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமுகை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மாகாளியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், தலைமறைவான சிவராஜை பிடித்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தந்தையை தோசைக் கரண்டியால் அடித்து கொலை செய்ததுடன், பாபநாசம் பட பாணியில் உடலை மறைக்க முயற்சித்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Also Watch

First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்