தாயின் கள்ளக்காதலனை ஓடஓட விரட்டி கொலை செய்த மகன் - சென்னையில் பயங்கரம்

சென்னை சைதாப்பேட்டையில் தாயின் கள்ளக்காதலனை ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

தாயின் கள்ளக்காதலனை ஓடஓட விரட்டி கொலை செய்த மகன் - சென்னையில் பயங்கரம்
மாதிரிப்படம்
  • Share this:
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (46). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மேற்கு சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்த செல்வி என்பவருடன் முனியாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் மேற்கு சைதாப்பேட்டையிலேயே ஒன்றாக கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். இது செல்வியின் மகனான வேலாயுதத்திற்கு பிடிக்கவில்லை. அடிக்கடி முனியாண்டியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இன்று இரவும் சண்டை நடந்துள்ளது. அப்போது வேலாயுதம் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டில் இருந்த முனியண்டியை கத்தியால் குத்தினர். உயிர் பிழைக்க அவர் தெருவில் ஓடினார். ஆனால் வேலாயுதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.


Also read... கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சூரி, விமல் மீன்பிடித்த விவகாரம் - வனத்துறையினர் 3 பேர் பணியிடமாற்றம்

தகவல் அறிந்து குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனியாண்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading