தூத்துக்குடியில் மாத்திரை சாப்பிடச் சொல்லிய தந்தையை உலக்கையால் அடித்துக் கொன்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகன்

தூத்துக்குடியில் மாத்திரை சாப்பிடச் சொல்லிய தந்தையை உலக்கையால் அடித்துக் கொன்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகன்

மாதிரிப் படம்

கோவில்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை மாத்திரை போடச் சொல்லிய தந்தை உலக்கையால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 73 வயதான மோகன்ராஜ் , சித்த வைத்தியம் மற்றும் விவசாயம் பார்த்து வந்துள்ளார். முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது மனைவி ஆனந்தியுடன் வாழ்ந்து வந்தார்.

  மோகன் - ஆனந்தி தம்பதிக்கு 23 வயதில் புருஷோத்தமன் என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்த புருஷோத்தமன் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக புருஷோத்தமன் மனநலம் பாதிக்கப்பட்டதால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

  தினமும் மாத்திரை சாப்பிட்டுவந்த புருஷோத்தமன், கடந்த இரண்டு நாட்களாக மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை. புதன்கிழமை இரவு மோகன்ராஜ், மகனை மாத்திரை எடுத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் புருஷோத்தமன் மாத்திரை சாப்பிடாமல் தந்தை மீது கோபப்பட்டுள்ளார்.

  Also read: தனிக்குடித்தனம் கேட்ட காதல் மனைவி.. திருமணமான மூன்றே மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை - தென்காசியில் சோகம்

  இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே திடீரென வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து வந்த புருஷோத்தமன் தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் மோகன்ராஜ் முகத்திலும், நெற்றியிலும் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் சடலத்தை அகற்றி, புருஷோத்தமனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையுடன் எப்போதும் பாசத்துடன் இருக்கும் புருஷோத்தமன் தந்தையை எப்படி கொன்றார் என்று தெரியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: