முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடிபோதையில் தாயை தாக்கிய தந்தையை வெட்டி வீசிய மகன் - நாகையில் பரபரப்பு சம்பவம்

குடிபோதையில் தாயை தாக்கிய தந்தையை வெட்டி வீசிய மகன் - நாகையில் பரபரப்பு சம்பவம்

இறந்த தமிழ்வாணன்

இறந்த தமிழ்வாணன்

நாகை அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகனே அரிவாளால் வெட்டி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள அரசூர் செல்லும் சாலையில், குட்டகன்னி என்ற குளத்தில், பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அருகில் வேலை செய்தவர்கள் திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் துணை கண்காணிபாளர் முருகவேல், நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் எறிந்த நிலையில் கிடந்தவர் திருப்புகலூர் மேல்பகுதி கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான தமிழ்வாணன் என்பது தெரியவந்தது.

பின்னர் அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் தந்தையை மகனே வெட்டி கொலை செய்ததும், கொலைக்கான தடையங்களை மறைக்க காட்டில் வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தமிழ்வாணனுக்கு 48 வயதான ஜெயசுதா என்கிற மனைவியும், தமிழ்ச்செல்வன், சந்தியா, தவசீலன், தனுஷ் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். மேற்கண்ட தமிழ்வாணன் தினமும் இரவு குடித்துவிட்டு மனைவி ஜெயசுதாவிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் வெளியூரில் வேலை பார்த்து வந்த மூத்த மகன் தமிழ்ச்செல்வன், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்வாணன் தினமும் குடித்து விட்டு மனைவி ஜெயசுதாவிடம் தகராறு செய்ததை தமிழ்ச்செல்வன் கண்டித்துள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தமிழ்வாணன் தினமும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தமிழ்வாணன் வழக்கம் போல் குடித்துவிட்டு அரிவாளை எடுத்து மனைவி ஜெயசுதாவை வெட்ட முற்பட்டபோது, தமிழ்செல்வன் அரிவாளை, தமிழ்வாணனிடமிருந்து பிடுங்கி தந்தை தமிழ்வாணனை வெட்டியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வன் மற்றும் தாய் ஜெயசுதா இருவரும், இறந்த தமிழ்வாணனின் உடலை ஒரு பாயில் சுருட்டி அரசூர் ரோட்டில் உள்ள தண்ணீர் இல்லாத குட்டகன்னி குளத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பாதி எரிந்த தமிழ்வாணனின் உடலை குளத்தில் உள்ள காட்டாமணி காட்டில் மறைத்து வைத்து விட்டு சகஜமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் துருநாற்றம் வீசவே போலீசாருக்கு அந்த பகுதியினர் தகவல் கொடுத்ததின் பேரில் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து ஜெயசுதா, தமிழ்செல்வன், தவசீலன் ஆகிய 3 நபர்களையும் திட்டச்சேரி காவல் நிலையத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூம் படிக்க...

BREAKING | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Nagai district