கடலூரில் குடிபோதையில் இருந்த மகன்... தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கொடூரம்...

Youtube Video

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த மகனை தட்டிக்கேட்ட தந்தையை மகனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி மோகன்சிங் தெருவை சேர்ந்தவர் 55 வயதான பரசுராமன். மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும் இரண்டு மகன் மற்றும் ஒருமகள் உள்ளனர். ஒரு மகனுக்கும், மகளுக்கும் திருமணம் முடித்த நிலையில், பரசுராமனும் அவரது மனைவியும் இளையமகன் 22 வயதான சக்திவேலுடன் வசித்து வந்துள்ளனர்.

  பள்ளிப்படிப்பை பாதியில் முடித்த சக்திவேல் தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சக்கிவேல் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் தந்தை தாயிடம் பிரச்சனை செய்து வந்துள்ளதாக தெரிகின்றது.

  அத்துடன் மதுபோதையில் தெருவில் இருப்போரிடமும் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார். சிறுவயதிலையே மது பழக்கத்திற்கு சக்திவேல் அடிமையானதால் மது அருந்தாத நேரங்களில் மன அழுத்த நோயாளியை போன்று நடந்து கொண்டுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மதுபழக்கத்தில் இருந்து விடுபடவும், மனநோய் பிரச்சனைக்கும் சிக்கிச்சை அளித்து வந்துள்ளனர்.

  இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக சக்திவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் பரசுராமன் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்த சக்கிவேல் அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளார்.

  வீட்டிற்கு வந்த மகனை மீண்டும் மருத்துவமனை அழைத்து செல்ல முயன்றுள்ளார் பரசுராம். ஆனால் மதுகுடித்திருந்த சக்திவேல் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

  ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சக்கிவேல் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தந்தை பரசுராமனை தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். ரத்தவெள்ளத்தில் சரிந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

  தகவலறிந்து வந்த முதுநகர் போலீசார் தப்பி சென்ற சக்திவேலை மீன்மார்கெட்டில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபோதையில் தந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். சக்திவேலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடி போதையில் மகனே தந்தையை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி : அவினாசி சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: